கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர் 38,950 பேருக்கு விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டு)தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. டேட்டா கார்டு விநியோகத்தை நாகர்கோவில் தெதி இந்து கல்லூரியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடக்கி வைத்தார். ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார்.
இதைப்போல நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட 350 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.1.62 கோடி மதிப்பில் 2.800 கிலோ தங்கம் வழங்கப்பட்டது. மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் சரோஜினி, அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் எஸ்.ராஜா ஆறுமுகநயினார், மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago