நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 49,263 விவசாயிகள் பெற்ற ரூ.281.50 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியது:
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 121 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
இவற்றில் நாகை மாவட்டத்தில் 27,425 விவசாயிகளுக்கு ரூ.134.35 கோடி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 21,838 விவசாயிகளுக்கு ரூ.147.15 கோடி என மொத்தம் 49,263 விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன், நகைக்கடன் ரூ.281.50 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago