கடம்பூர்-கோவில்பட்டி 2-வது இருப்பு பாதை பிப்.26-ல் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

By செய்திப்பிரிவு

மதுரை - தூத்துக்குடி வரையிலான 160 கி.மீ. தூரத்துக்கு 2-வது இருப்பு பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் இப்பணிகளை செய்து வருகிறது.

சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை ரூ.445 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தடத்தில் கடம்பூர் முதல் தட்டப்பாறை வரையிலான 33 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முழுமைபெற்று, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. கடம்பூர் முதல் கோவில்பட்டி வரையிலான 21 கி.மீ. தூர 2-வது இருப்பு பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் தலைமையிலான குழுவினர் பிப்ரவரி 26-ல் ஆய்வு செய்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 28-ம் தேதி 120 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடை பெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்