தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தார்.
விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் விமான நிலையவிரிவாக்க திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்தார். பொதுமக்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆட்சியர் பேசும்போது, “விமான நிலையத்துக்கு தேவையான நீரைதாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்ககோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் கண்காணிப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளிலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
விமான நிலைய வளாகத்துக்கு அருகில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகள் தெரிவிக்கப்படும். மழைநீரை அருகில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியேற்ற விமான நிலைய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago