248 கிராம கூட்டுக்குடிநீர் திட்டம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் தேசிய ஊரக குடிநீர் திட்டம் மற்றும் மாநில அரசின் பங்களிப்பின் கீழ் ரூ.94.04 கோடி மதிப்பில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் 88 கிராமங்கள், விளாத்திகுளம் தொகுதியில் 141 கிராமங்கள், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 19 கிராமங்கள் என, 248 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவடைந்த நிலையில் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் நடந்த விழாவில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மின்மோட்டாரை இயக்கி வைத்து, குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் தற்போது 175 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என, குடிநீர் வடிகால் வாரியம் தெரி வித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்