பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மற்றும் தி.மலையில் மறியலில் ஈடுபட்ட 570 சத்துணவு ஊழியர்கள் கைது

By செய்திப்பிரிவு

வேலூர் மற்றும் தி.மலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சாலை மறியலில் ஈடுபட்டசத்துணவு ஊழியர்கள் 570-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

தமிழகத்தில் சத்துணவு ஊழியர் களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு, சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் உமாராணி கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மாவட்டத் தலைவர் செல்வம் போராட்டம் குறித்துப் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சத்துணவு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர்கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரை யும் விடுவித்தனர்.

திருவண்ணாமலை

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தி.மலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று சாலை மறியல் நடைபெற்றது.

மாவட்ட இணை செயலாளர் விஜயா தலைமை வகித்தார். தி.மலை – வேலூர் சாலையில், சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 270 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்