கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை, கடந்த 2-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் சுமார் 16,146 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதேபோல நீலகிரி மாவட்டம் உதகை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு ‘2ஜிபி’ விலையில்லா தரவு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மாணவர்களுக்கு வழங்கி பேசும்போது ‘‘உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கோத்தகிரி என்பிஏ பாலிடெக்னிக் கல்லூரி,உதகை, கூடலூர் அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கலைக் கல்லூரி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கலைக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 9,320 மாணவர்களுக்கு ‘2ஜிபி’ விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago