மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பாத யாத்திரை பேரணி நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் காயத்ரி முன்னிலை வகித்தார்.
பாத யாத்திரை பேரணி குறித்து மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, "மத்திய பாஜக அரசானது விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடுகின்றனர். போராட்டத்தின் மத்தியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் குளிரில் உயிரிழந்துள்ளனர். இதை தற்போது வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் இந்த பாத யாத்திரை பேரணியை நடத்தி வருகிறோம்" என்றார். திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை அண்ணா நகரில் தொடங்கிய பேரணி, செட்டிபாளையம் வழியாக இந்திரா நகர் பகுதிக்கு சென்று நிறைவு பெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago