கடன் வாங்கித் தருவதாகவிளம்பரம் செய்து மோசடிபரோட்டா மாஸ்டர் கைது

By செய்திப்பிரிவு

திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவர்

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு கடன் கேட்டு தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த எண்ணில் பேசிய இளைஞர், ரூ.3 லட்சத்தை தன் வங்கிக் கணக்கில் செலுத்தினால், தனியார் நிதி நிறுவனம் மூலம் ரூ.15 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஐயப்பன் அந்த இளைஞரின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி கடன் பெற்றுத் தரவில்லை.

இதுகுறித்து, புகாரின்பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கன்னியாகுமரி மாவட்டம், வடவினை கிராமத்தைச் சேர்ந்த ஜீனோ(32) என்பவரைநேற்று கைது செய்தனர். ஜீனோ மதுரையில் உள்ள உணவு விடுதியில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் என்பதும், விரைவில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக போலீஸார் கூறினர்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்