விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரு பிரிவினருக்கு நீண்ட காலமாக சுடுகாடு வசதி இல்லை. பக்கத்து கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பகுதிக்கு தனியாக சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மட்டுமேஉள்ளது. இது ஆயிரத்து 500 மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை. கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிஅமைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கிடவும் கோரிக்கை வைத் தனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த வளவனூர் போலீஸார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலைமறியலை கைவிட செய்தனர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago