புதுச்சேரி சுகாதாரத் துறையில் அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அரசு ஆணை மற்றும் விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பல்வேறு போராட்டங் களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சுகாதார ஊழியர்கள் பணிகளை புறக்க ணித்து அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். இதில், புதுச்சேரி அரசுபொது மருத்துவமனை, மகளிர்மற்றும் குழந்தைகள் மருத்துவ மனை, அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களில் உள்ள செவிலியர் கள், மருந்தாளுநர்கள், வார்டு அட் டெண்டர், தூய்மை பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு நுழை வுச்சீட்டு பதிவு செய்யப்பட வில்லை.
எனவே வெளிப்புற சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago