ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்புப் போராட் டத்தைத் தொடங்கினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சட்டப்பேரவையில் 110 விதி யின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய் வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக் கப்பட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்குப் பணிக் கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்ச மும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் தொடங்கியது.
மதுரையில் நடந்த காத்திருப்புப் போராட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வரதலட்சுமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் ஜெயச்சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நூர்ஜகான், சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரா.தெய்வராஜ் ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.
திண்டுக்கல்விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த காத்திருப் புப் போராட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலரும் மாநில துணைத் தலைவருமான சாரதாபாய், பொருளாளர் கச்சதேவி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்
தேனி
தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத் துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஓ.சாந்தியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.நாகலட்சுமி, பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகன், பொருளாளர் ஜி.சண்முகம் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை ஆட்சியர் அலுவல கம் முன் நடந்த போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாக்யமேரி, பொரு ளாளர் தாமரைச்செல்வி முன் னிலை வகித்தனர். மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஜெயமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago