ஓசூர் வட்டத்தில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் தும்மனப்பள்ளி, வத்திரப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள 50 விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை நேரில் கண்டுணரும் வகையில் அலசப்பள்ளி கிராமத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப் பட்டனர்.
இயற்கை விவசாயம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஓசூர் வட்டத்தில் உள்ள அலசப் பள்ளி கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் முன்னோடி விவசாயியாக நாராயணரெட்டி விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தோட்டத்தில் இயற்கை முறையில் பஞ்ச காவியா, ஜீவாமிருதம், கனஜீவா மிருதம், தசகாவியா மற்றும் பூச்சி விரட்டி ஆகியவை தயாரித்து இயற்கை உரமிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த இயற்கை விவசாய முறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஓசூர் வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில் தும்மனப்பள்ளி, வத்தரப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு விவசாயி நாராயண ரெட்டி, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், மண்வளத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார்.
மேலும் பஞ்சகாவ்யா, கனஜீவாமிருதம் தயாரிப்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார். இந்த சுற்றுலாவில் விவசாயிகளுடன் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மீனா, எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago