தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி முத்து சங்குகுளியாட்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் ஆட்சியர்கி.செந்தில் ராஜிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி திரேஸ்புரம் விவேகானந்தர் நகர் கடற்கரையில் மீன் இறங்குதளம் அமைக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
அம்பேத்கர் சிலை
திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள், அதன் தலைவர் முரசு தமிழப்பன் தலைமையில் அளித்த மனுவில், “திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் முழுவுருவசிலை அமைப்பது தொடர்பான, 32 ஆண்டுகளுக்கும் மேலானகோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வசதி
விளாத்திகுளம் வட்டம் கீழவைப்பார் கிராம மக்கள் முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் தலைமையில் அளித்த மனுவில், “கீழவைப்பார் வழியாக சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி மற்றும்தூத்துக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் இரண்டு தனியார் பேருந்துகள், தற்போது கீழவைப்பார் வழியாகச் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயங்கி வருகின்றன.இதுதொடர்பாக நடவடிக்கை தேவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருவைகுளம்
தருவைகுளம் புனித சூசையப்பர் சபை தலைவர் அந்தோனி அண்ணாதுரை தலைமையில் கிராமமக்கள் அளித்த மனுவில், “தருவைகுளம் வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பொதுமக்களை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். பேருந்துகள் அனைத்தும் தருவைகுளம் ஊருக்குள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் கட்சி
ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்டச் செயலாளர் க.வே.சுரேஷ்வேலன் தலைமையில் அளித்த மனுவில், “தமிழகத்தில் தொடரும் அருந்ததியர் மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல அலங்காரத்தட்டு
மேல அலங்காரத்தட்டு மேற்கு பகுதியில் வசிக்கும் 21 குடும்பங்களை சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கே.சங்கரன் தலைமையில் அளித்த மனுவில், “அரசு புறம்போக்கு நிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago