நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக சந்திப்பில் கண்காணிப்பு கேமரா மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோந்து வாகன செயல்பாட்டை எஸ்.பி. பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “ கன்னியா குமரி மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், புதிய நவீன ரோந்து வாகனம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில்5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முக்கிய விழாக்களில் இவை பயன்படுத்தப்படும். சுழல் கேமராக்கள் உள்ளதால் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்ல 39 வழிப்பாதைகள் உள்ளன.
இவற்றில் தமிழக, கேரள போலீஸார் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 63 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago