மல்லிப்பட்டினம் மீன்வளத் துறை அலுவலகம் முன்பு கஞ்சித் தொட்டி திறப்பு, காத்திருப்புப் போராட்டம் 5 மாவட்டங்களின் நாட்டுப் படகு மீனவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மல்லிப்பட்டினம் மீன்வளத் துறை அலுவலகம் முன்பு நேற்று 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் கஞ்சித்தொட்டி திறப்பு, காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை, ராமநாத புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப் பட்டினம் மீன்வளத் துறை அலு வலகம் முன்பு நேற்று கஞ்சித் தொட்டி திறந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட மீன வர்கள் கலந்துகொண்டனர்.

கடல்வளம், மீன்வளம், நாட்டுப் படகு மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க தவறிய மீன்வளத் துறை நிர்வாகத்தைக் கண்டித்தும், விசைப் படகுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை மீன்பிடிக்கப் பயன்படுத்துவது, 5 நாட்டிக்கல் கடல் மைலுக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிப்பது ஆகியவற்றை தடைசெய்ய வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் ஜெயபால், மாவட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டை பி.முருகானந்தம், ராமநாதபுரம் கருணாமூர்த்தி, திருவாரூர் ராஜேந் திரன், நாகை பழனி ஆகியோர் தலைமை வகித்தனர்.

பின்னர், இரட்டைமடி வலையை தடை செய்யாத மத்திய, மாநில அரசுகளையும், மீன்வளத் துறையையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு, மீன்வளத் துறை அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக புறப்பட் டுச் சென்றனர்.

தகவலறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை உதவி ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் போலீஸார், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, 5 மாவட்ட மீனவர்களும் உதவி ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது, இரட்டைமடி வலைகள் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆட்சியர் பாலச்சந்தர் உத்தரவாதம் அளித்ததால், 5 மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களின் காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்