தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 25-ம் கட்ட விசாரணை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே 24 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 616 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். 850 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆணையத்தின் 25-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. சம்பவத்தின் போது வாகனங்கள் எரிக்கப் பட்ட அரசு ஊழியர்கள் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் நேற்று 14 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த விசாரணை 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆணையத்தின் 25-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்