தஞ்சாவூர் அருகேயுள்ள திருக் கானூர்பட்டி மாதா கோயில் தெருவில், புனித அந்தோனியார் பொங்கலையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை ஆட்சியர் ம.கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர், புதுக் கோட்டை, திருச்சி, மதுரை உள் ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 593 காளைகள், வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றைப் பிடிக்க 347 மாடுபிடி வீரர்கள் களமிறங் கினர். இவர்கள் 50 பேர் வீதம் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்போட்டியில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை களின் உரிமையாளர்கள் என 24 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 8 பேர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காளைகளை பிடித்தவர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ, சைக்கிள்கள் உள் ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், 18 மாடுகளைப் பிடித்த திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த பெலிக்ஸ் அடைக்கலராஜ் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்த சோக்காலி என்பவருக்கு சொந்தமான காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப் பட்டது. இருவருக்கும் தலா ஒரு குளிர்சாதனப் பெட்டியை கோட் டாட்சியர் எம்.வேலுமணி பரிசாக வழங்கினார்.
ஜல்லிக்கட்டில், திருக்காட்டுப் பள்ளி அருகே மாறனேரியைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவரின் காளை வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டதும், வீரர்களைக் கடந்து களத்தைவிட்டு வெளியே சென்றது. அப்போது, சாலையில் நின்றிருந்த மற்றொரு காளையின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த ரிச்சர்ட்டுக்கு சொந்தமான காளை உயிரிழந்தது.
ஆவாரம்பட்டியில்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ஆவாரம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க திருச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 801 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக் குப் பிறகு, வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை களத்தில் நின்ற 181 மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர். இதில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர், மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago