திருப்பத்தூர் அடுத்த செட்டேரி பகுதியில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய தொடக்கப்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்ட தொடக்கப்பள்ளியை திறந்து வைத்து பள்ளி மாண வர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செட்டேரியில் புதிய அரசுப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகரும் நியாய விலைக்கடை விரைவில் கொண்டு வரப்படும். மேலும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வீடு களுக்கும் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி, அதை நிறைவேற்றியும் வருகிறது. இந்தியாவிலேயே மக்கள் நலத் திட்டங்களை விரைந்து வழங்கு வதில் தமிழகம் முன்னோடி மாநில மாக விளங்குகிறது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார், கூட்டுறவு சங்கத்தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago