செய்யாறில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 843 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து, தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “வேலைவாய்ப்பு முகாம், உங்களது வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. வேலை கிடைப்பது மிக கடினமானது. குறிப்பிட்ட வேலைதான் வேண்டும் என்று இல்லாமல், கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுநாள் வரை, பெற்றோரை சார்ந்து இருந்தீர்கள். இனி, உங்கள் வருமானம் மூலம் உங்களை சார்ந்து இருக்க முயற்சிக்க வேண் டும். அரசாங்கம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத் தப்படுகின்றன.
அதன்மூலம் லட்சக்கணக்கான பணிகளுக்கு தேர்வு நடைபெறு கிறது. அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளை பயன்படுத் திக் கொள்ள வேண்டும். உங்களது திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 72-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்ற 4,121 பேரில், 843 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago