நீலகிரி மாவட்டம் உதகை காந்தலை சேர்ந்த கோவிந்தராஜ், உதகை நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்துவருகிறார். நேற்று முன்தினம் தலையாட்டு மந்து பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் மாரி என்பவர் குடி போதையில் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளார்.
பணி செய்ய விடாமல் தடுத்துதாக்கியதாக மாரி மீது உதகை பி1 காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் அளித்துள்ளார். துப்புரவு மேற்பார்வையாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தூய்மைப்பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
உதகை நகராட்சி நகர்நல அலுவலர் விஜயசந்திரன் தூய்மைபணியாளர்கள் இடையே பேசும்போது, ‘‘மேற்பார்வையாளரை தாக்கிய நபர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார். இதையடுத்து. தூய்மைப் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago