திருப்பூர் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தாலிக்கு தங்கம், நிதியுதவி நேற்று வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த 81 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் ரூ.20 லட்சத்து 25,000, பட்டப்படிப்பு படித்த 205 பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 50,000 நிதி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மொத்தம் 286 பயனாளி களுக்கு 2 கிலோ 288 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சத்து 27932. இதனை வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago