எம்.பி.சி பிரிவில் உள் ஒதுக்கீடு கோரி பிப்.26-ல் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

மிகவும் பிற்பட்டோர் பிரிவில் இருக்கும் மருத்துவர் சமூகத்துக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் வரும் 26-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தச் சங்கங்களின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் என்.ராஜ் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மருத்துவர் சமூகத்துக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், மருத்துவர் சமூகத்துக்கு தனிச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மாநில சங்கங்களின் தீர்மானங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் 26-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 27 கிளை சங்கங்கள் பங்கேற்பது என்றும், அன்றைய தினம் 8,500 முடி திருத்தும் கடைகளை மூடுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்