திருநின்றவூர்- பூவிருந்தவல்லி பேருந்தை சாதாரண கட்டணத்தில் இயக்கக் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருநின்றவூரில் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கம் சார்பில், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த தடம் எண் 54 - ஏ பூவிருந்தவல்லி - திருநின்றவூர் பேருந்தை தடம் எண் 597- சி சொகுசுப் பேருந்தாக மாற்றி, ரூ.27 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

பல ஆண்டுகளாக எளிதில் புரியும்படி, முதன்முதலில் 54-ஏ என்ற வழித்தட எண்ணுடன் பிராட்வேயில் இருந்து திருநின்றவூருக்கு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. பின்னர், பூவிருந்தவல்லி - திருநின்றவூர் ரயில் நிலையம் இடையேமட்டும் சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இப்பேருந்து சொகுசுப் பேருந்தாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

திடீரென சொகுசுப் பேருந்தாக மாற்றப்பட்டு, அதிக கட்டணம் வசூலிப்பதோடு வழித்தட எண்ணும் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இப்பேருந்து கட்டண உயர்வுபொதுமக்களுக்கு பெருஞ்சுமையாக உள்ளது. எனவே, முன்புஇருந்த வழித்தடம் எண் 54 - ஏ என்ற எண்ணிலேயே சாதாரண கட்டணத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், கரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி - பெரியபாளையம், திருநின்றவூர் - தியாகராய நகர் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். திருநின்றவூர், திருவள்ளூரில் இருந்து தாம்பரம் புறவழிச் சாலை வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்