செங்கை மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் 31,002 தடுப்பூசி போட பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களையும், அரசு ஊழியர்களும் ஊக்கப்படுத்தும் வகையில் அண்மையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அரசுவழங்கும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களான துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என நேற்று 75 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 926 போலீஸாரில் இதுவரை 172 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில், 5,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் மருத்துவர்கள், காவல்துறை, அரசு ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் அடங்குவர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 5,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் மருத்துவர்கள், காவல்துறை, அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் அடங்குவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்