கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான வங்கிக்கடன் இணைப்பு தொடர்பாக மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூடுதல் தலைமை செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி முன்னிலை வகித்தார். இதில், தமிழகத்தில் சுய உதவிக் குழுக்கள் வங்கிக்கடன் இணைப்பு ரூ.14,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாளது வரை ரூ.17,500 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் சுய உதவிக் குழுக்கள் கடனை முழுமையாக திரும்பி செலுத்தி வருவதால் அதிகளவில் தொடர்ச்சியாக வங்கிக்கடன் இணைப்பினை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிட வங்கியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்கள். மேலும், வங்கிக்கடன் பெறும் சுய உதவிக் குழுக்கள் கடனை திரும்ப முறையாக செலுத்துவதற்கு ஒவ்வொரு வங்கிக் கிளைமேலாளர்கள் தலைமையில் கடனை திரும்பசெலுத்தும் குழுவானது சமுதாய அமைப்பு களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளதை அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னத்தின் கூடுதல் இயக்குநர் கணேஷ் கண்ணா, முதுநிலை ஆலோசகர் திருநாவுக் கரசு ஆகியோர் கலந்து கொண்டு வங்கிக் கடன் இணைப்பு பற்றியும், கடன் திரும்ப செலுத்திடும் முறைகள் பற்றியும் விளக்கி கூறினர்.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் திட்ட இயக்குநர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள், முன்னோடி வங்கி மேலாளர்கள், மண்டல அளவிலான அனைத்து வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago