நெல்லை உள்ளிட்ட தென் மாவட் டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிப்.27, 28, மார்ச் 1-ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரி வித்தார்.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டம் நடை பெற்றது. மேற்கு மாவட்டத் தலைவர் ரெங்கசாமி, கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜாசொக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை வகித்தார். மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாணிக்கம்தாகூர் கூறியதாவது:
தேர்தலுக்காக வாக்குறு திகளை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு மாறியுள்ளது. ஜோதிமணி எம்.பி. மீதான காவல் துறையினரின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.தமிழகத்தில் ராகுல்காந்தி மீண் டும் வரும் 27, 28 மற்றும் மார்ச் 1-ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் தூத்துக்குடியிலும், அதைத் தொடர்ந்து தென்காசி, நெல்லை, கன்னியாகுமரிக்குச் சென்று மக்களை சந்திக்க உள்ளார். இந்த பயணம் தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும்.
காமராஜர் காலம் தொடங்கி தேவேந்திர குல மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. தேர்தலுக்காக எந்த வேஷமும் போடக்கூடியவர் மோடி. தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago