கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாணவ, மாணவி களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாணவ, மாணவிகளுக்கென தமிழக அரசால் 26 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், பள்ளி மாணவர் களுக்கு 14 விடுதிகளும், மாணவிகளுக்கு 8 விடுதிகளும், கல்லூரி மாணவர் களுக்கு ஒரு விடுதியும், மாணவிகளுக்கு 2 விடுதி களும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு விடுதியும் செயல்படுகிறது.
இந்த விடுதிகளில் சேர, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தி லிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை தொடர்புடைய விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலத்திலிருந்தோ இலவச மாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு நாளைக்கு (22-ம் தேதி) முன்பும், கல்லூரி விடுதிகளுக்கு பொறுத்த வரை வரும் 23-ம் தேதிக்கு முன்பும் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago