தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்றம் சார்பில் 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று மாநில அளவிலான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மன்ற மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் தலைமை வகித்தார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு அடுத்த முறை ஆட்சியில் அமர்ந்ததாக வரலாறு இல்லை. ஆசிரியர்கள் உயர்ந்தால் தான் நாடு முன்னேறும். அதனால் தான் மறைந்த முதல்வர் கருணாநிதி ஆசிரியர்கள் மீது எப்போதும் அக்கறையோடு இருந்து, அவர் களது கோரிக்கைகளை நிறை வேற்றி வந்தார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அடுத்து திமுக ஆட்சி அமைந்தவுடன் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறை வேற்றுவார். திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் போராட வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.
ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம், ஆண்டு ஊதிய உயர்வுகள், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியங்கள், பதவி உயர்வு ஆகியவற்றை திரும்ப வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொறுப்பாளர்கள் முருக.செல்வ ராஜன், சுப்பிரமணியன், மாநகர் மாவட்டச் செயலாளர் சைவராசு மற்றும் மாநில நிர்வாகிகள் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.
முன்னதாக, திருச்சி மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி வர வேற்றார். நிறைவாக, கரூர் மாவட் டச் செயலாளர் வேலுமணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago