எட்டரை கிராமத்தில் மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

திருச்சி மதி இந்திரா காந்தி கல்லூரி உயிர் வேதியியல் துறை சார்பில் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எட்டரை கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப் பின் நிறுவனர் கண்ணகி சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா, மாதவிடாய் சுகாதாரம், உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பேசியது: பெண்கள் உடல் நலத்தை பேணுவதிலும், சத்தான உணவுகளை உண்ணுவ திலும், கல்வி பயில்வதிலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

எட்டரை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அன்பரசு, கல்லூரி உயிர் வேதியியல்துறைத் தலைவர் பி.அனிதா உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்