தி.மலை அடுத்த பாலானந்தல் கிராமத்தில் உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் பாலானந்தல் கிராமத்தில், இழப்பீடு வழங் காமல் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்தும், காவல் துறையினர் மிரட்டலை கண்டித்தும் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ஏற்கெனவே அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரம் மீது ஏறி 2 பெண்கள் உட்பட 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.

இதேபோல, தி.மலை மாவட் டம் வேட்டவலம் அடுத்த காட்டு மலையனூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி லட்சுமி. இவரது விவசாய நிலத்தில், தனியார் நிறுவனம் மூலம் உயர் மின் கோபுரம் அமைக்க நேற்று திடீரென பள்ளம் தோண்டப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற லட்சுமி, நிலத்துக்கான இழப்பீட்டு தொகை கொடுக்காமல் பணியை தொடங்கக் கூடாது என கூறினார். இருப்பினும், அங்கிருந்தவர்கள் பணியை தொடர்ந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த லட்சுமி, மின் கோபுரம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி படுத்துக் கொண்டார். அப்போது அவர், "தனது நிலத்துக்கு இழப்பீடுகொடுத்த பிறகே பணியை தொடங்க வேண்டும்" என தெரி வித்தார்.

இதையடுத்து, பள்ளம்தோண்டும் பணியை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்