பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாதயாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் பாதயாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுடெல்லியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவா கவும், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பாதயாத்திரை போராட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் இருந்து கெஜல்நாயக்கன்பட்டி நோக்கி நடைபெற்ற பாதயாத்திரை போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுடெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டபடி பாதயாத்திரை செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட வி.சி.மோட்டூரில் இருந்து தொடங்கிய பாதயாத்திரைக்கு ஒன்றிய தலைவர் வி.சி.மோட்டூர் கணேசன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். இதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். அவர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தம் நோக்கி மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் தொடங்கிய பாதயாத்திரையை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாதயாத்திரை செல்ல முயன்றதாக 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்