நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 32,550 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.232.63 கோடி தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்தமைக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்கா வளாகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்கி பேசும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் 32,550 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.232.63 கோடி தள்ளுபடி செய்தமைக்கான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விரைவில் வழங்கப்படும்’’ என்றார். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி டி.வினோத், வேளாண் விற்பனைக் குழு தலைவர் கே.ஆர்.அர்ஜூணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago