திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, மெய்யூர், எறையூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1000 பேர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கோயில் நிலங்களிலும், கால்வாய் ஓரங்களிலும் வசித்து வருகின்றனர். எனவே, அவர்கள் இலவச வீட்டுமனை கோரி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கை மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன், செயலாளர் முருகன், பொருளாளர் முத்துக்குமார், பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, இலவச வீட்டுமனை, ஜிஎஸ்டி வரியால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago