புதுவையில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் சித்து விளையாட்டில் இறங்கியுள்ளது விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசியல் சித்து விளையாட்டில் பாஜக இறங்கி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் இயங்கி வந்த அரசுப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கல்வித் துறை பரிந்துரை செய்தது. இதையடுத்து ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கின. 5 சதவீத பணிகள் முடிந்த நிலையில் இந்த இடத்தில் பள்ளிக் கட்டிடம் கட்ட ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து, நீர்நிலை புறம்போக்கில் இக்கட்டிடம் கட்டுவதாகக் கூறி அதற்கு தடை ஆணையும் பெற்றனர்.

திட்டமிட்ட இடத்திலேயே பள்ளி கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், கோவிந்தவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து திருமாவளவன் கூறியதாவது:

புதுச்சேரியில் பாஜக மிக மோசமான, அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது. கர்நாடகாவில் மத்தியபிரதேசத்தில் செய்ததைப் போல் தமிழகத்திலும் அநாகரிக அரசியலை செய்யத் துடிக்கின்றனர். இதற்கு முன்னோட்டமாகவே புதுச்சேரியில் அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றியுள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்