ரூ.58 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழங்கினார்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கி பேசியது:

தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் 63 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. செவித்திறன் மற்றும் பார்வைத் திறன் பாதித்த 147 பேருக்கு ரூ.18.81 லட்சம் மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. கை, கால் குறைபாடுள்ள 49 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரும், 9 மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக் கப்பெறாதோர், உரிய நேரத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்" என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அ.பிரபு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் காந்த், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்