வைக்கோலால் மூடிவைக்கப்பட்டிருந்த நெல்லை தின்ற 3 மாடுகள் மரணம்

By செய்திப்பிரிவு

விளைநிலத்தில் வைக்கோலால் மூடிவைக்கப்பட்டிருந்த நெல்லை தின்ற 3 மாடுகள் இறந்தன. இதை யடுத்து, வைக்கோலில் விஷம் கலந்துவைத்திருந்ததாக புகார் எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் பெருக வாழ்ந்தானை அடுத்துள்ள கர்ணாவூரில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டதால், காலி யாக கிடக்கும் விளைநிலங்களில் கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள விளைநிலத்தில் நேற்று கோபால் என்பவர் தனது 3 மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அங்கு, அறுவடை செய்யப்பட்ட நெல்லை குவித்துவைத்து, அதை கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வைக்கோல் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வயல்வெளியில் குவித்து வைக்கப் பட்டிருந்த நெல் மற்றும் வைக் கோலை கோபாலின் 3 மாடுகளும் மேய்ந்துள்ளன. பின்னர், சிறிதுநேரத்தில் 3 மாடுகளும் உயிரிழந் தன. நெல்லை பாதுகாப்பதற்காக மூடிவைக்கப்பட்டிருந்த வைக் கோல் மீது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்திருந்ததாகவும் அந்த வைக் கோலை மாடுகள் தின்றதால் மாடுகள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோபால் மற்றும் கிராமத்தினர் அளித்த புகாரின் பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்