11 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில்விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சந்திப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித் துள்ளார்.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர்வுக் கூட்டம் நடைபெறு கிறது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல், விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற வில்லை. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டபோதும், விவ சாயிகள் குறைதீர்வுக்கூட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். இருப்பினும் பலனில்லை. இதற்கிடையில், ஆட்சி யராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி, ‘ஆன்லைன்’ மூலமாக விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தை கடந்த இரண்டு மாதங்களாக நடத்தினார்.

அதில், பெரியளவில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறவில்லை.

இந்நிலையில், குறைதீர்வுக் கூட்டங் களுக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதன்பிறகு, ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 3 வாரங் களாக மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டமும் நடைபெற வுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

வேளாண்மைத் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகளை தெரிவிக் கலாம். தனி நபர் குறைகள் குறித்து மனுவாக அளித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்