திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை தேசிய திறனறிவு தேர்வுகள்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வு நாளை நடைபெறுகிறது என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசுப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் தோறும் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை அரசால் வழங்கப் படுகிறது.

இந்நிலையில், 2020-21-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 மையங்களில் 21-ம் தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறனறிவு தேர்வு நடைபெறும். திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 2,399 மாணவர்கள் இத்தேர்வை எழுதஉள்ளனர். தேர்வில் கலந்துகொள் ளும் மாணவ, மாணவிகள் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் மாணவர்கள் வர வேண்டும். சானிடைசர் மற்றும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச்செல்ல அனுமதி உண்டு. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்கள் கருப்பு பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்