குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனி, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்று குடிநீர், ஆழ்குழாய் நீர் உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்குழாய்கிணற்றில் நீர் திடீரென வற்றி விட்டதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாள்தோறும் வழங்கிவந்த ஆற்று குடிநீரும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ந்து 10 நாட்களாக நிறுத்தப்பட்டதால், தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தண்டுக்காரன்பாளையம் பகுதியில் அவிநாசி - சத்தியமங்கலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேவூர் போலீஸார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்ஹரிஹரன் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “ஆற்று குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகிக்கமுடியவில்லை. அருகில் உள்ள பகுதியிலிருந்து முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்” எனதெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவிநாசி அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்