திருப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் இணைந்து நடத்திய இந்த முகாமில், தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.
முகாமில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலைபட்டதாரிகள் வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, தையல்பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து மாற்று திறனாளிகளும் பங்கேற்றனர். 20 நிறுவனங்கள் பங்கேற்றன. 250-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றதில், 137 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார். 40 மாற்றுத் திறனாளிகள் திறன் பயிற்சிக்கு பதிவு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றோர். படம்: இரா.கார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago