தமிழக காவல் துறை சார்பில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ (புன்னகையைத் தேடி) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் காணாமல்போன சிறுவர், சிறுமிகள், குழந்தைத்தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும்குழந்தைகளைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் குழு அமைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின்பேரில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மேற்பார்வையில், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டதில், 11 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுத்த ஒரு குழந்தை என மொத்தம் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.இவர்கள் குழந்தைகள் நலக் குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோர் மற்றும் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago