இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில், மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மீன் வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை வழங்கி உள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இந்த பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணைய தளமான www.fisheries.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 24-25, கோ ஆபரேட்டிவ் காலனி, 4-வது கிராஸ், கிருஷ்ணகிரி- 635 001 என்ற முகவரியில் இன்று (19-ம் தேதி) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago