சூளகிரியில் தினசரி சந்தையை ஏலம் எடுத்த குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆட்சியரிடம் எம்எல்ஏ முருகன் தலைமையில் வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் தலைமையில், சூளகிரியில் தினசரி சந்தையில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சூளகிரியில் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தை வளாகத்தில் 42 கடைகள் மற்றும் காலி இடத்தில் திறந்தவெளி கடைகள் அமைத்து அரசு நிர்ணயம் செய்த சுங்க வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சுங்க வரி வசூல்ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர், அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருகிறார். குறிப்பாக சந்தை தெருவிலும், நடைபாதையிலும், தள்ளு வண்டி வியாபாரிகளிடமும் கடைகள் வைக்க ரூ.1 லட்சம் முன்தொகை மற்றும் தினமும் ரூ.200 சுங்கவரி கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டிவசூல் செய்கிறார்.
இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சந்தையை ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர் விதிகளை மீறி செயல்படுவதால், அவரது குத்தகையை ரத்து செய்து, சாதாரண வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏலம் விட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago