சிதம்பரம் அருகே சாக்காங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஏழு மலை என்கிற ராஜி (35). லாரி ஓட்டுநர். இவரது மனைவி சிவரஞ்சனி (24). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த வாரம் சிவரஞ்சனிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் கருப்பாக உள்ளோம். குழந்தை மட்டும்எப்படி கலராக பிறந்தது என்றுமனைவியிடம் ராஜி கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜி அவரது மனைவி சிவரஞ்சனி யிடம் தகராறு செய்துள்ளார். இருவரும் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் ராஜி தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் அவர் படுத்துதூங்கினார். நேற்று காலை குழந்தை தொட்டிலில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த சிவரஞ்சனி அதிர்ச்சியடைந்தார். குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கணவர் ராஜியிடம் கூறியுள்ளார். அதற்கு ராஜி கூறியபதில் சிவரஞ்சனிக்கு சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒரத்தூர் போலீஸில் சிவரஞ்சனி புகார் செய்தார். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிதம்பரம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜி,தனது மனைவியின் நடத்தை யில் ஏற்பட்ட சந்தேகத்தில் குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றதாக கூறினார். இதை யடுத்து ராஜியை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago