வருவாய்த் துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையிலான அனைத்து வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2-வது நாளான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 99 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாரதிவளவன் தலைமை வகித்தார். கரூர் மாவட்டத்தில் 210 பேர் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். இதேபோல, நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்