சிதிலமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கிளைச் செயலாளர் எஸ்.அழகு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.சிகாமணி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும். நெருப்பெரிச்சல் பேருந்து நிறுத்தம் தொடங்கி, பாப்பண்ணன் நகர் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டும். முத்துமுருகன் லே-அவுட், பாப்பண்ணன் நகர் பகுதிகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும். குறைந்த மின் அழுத்தத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனப்பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் கட்சியினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சி 2-ம் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago