அவிநாசி அருகே வடுகபாளையத்தில் அடிப்படை பிரச்சினைகள் உட்பட 48 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சாலை, கழிப்பிடம், மேல்நிலைக் குடிநீர் தொட்டி அமைத்தல், மின் மோட்டார் பொருத்துதல் உட்பட 48 கோரிக்கைகளை முன்வைத்து, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, கோரிக்கைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் தரப்படும் என உறுதி அளித்தனர். இந்த கடிதத்தை ஊராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் கடிதத்தை கொடுக்க மறுத்து வெளியே சென்றுவிட்டார். இதனால் அனைவரும் வடுகபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். இதையடுத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒப்படைக்கப்பட்ட பின்பு, காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். பழனிசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago