திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், பல்லடம், அருள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று முன்தினம் இரவு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டல்கள், தள்ளுவண்டி உணவு விற்பனைக் கடைகள் உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 1500 உடைந்த முட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், செயற்கை வண்ணம் பூசப்பட்ட கோழி இறைச்சி, மீன் துண்டுகள், காளான் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் பறிமுதல் நடவடிக்கைக்கு உள்ளான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சில கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதோடு கரோனா மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago