உதகை அருகே சாண்டிநல்லா தவிட்டு கோடு மந்து பகுதியைச் சேர்ந்த காந்த் என்பவரது மகள் நந்தினி, சென்னை சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பான பி.ஏ.பி.எல் படித்து தேர்ச்சி பெற்று தோடர் சமுதாயத்தின் முதல் வழக்கறிஞராகி உள்ளார்.
இதுதொடர்பாக நந்தினி கூறும்போது, ‘‘தோடர் சமுதாயத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்பதில் பெருமையாக உள்ளது. என்னைப் போன்று என் சமுதாயத்தில் உள்ளவர்கள் படித்து முன்னேற பாடுபடுவேன்’’ என்றார்.
தோடரின மக்களின் தலைவர் மந்தோஸ் குட்டன் கூறும்போது, ‘‘தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த எனது மகள் பாரதி, பல் மருத்துவராகி எங்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, தற்போது முதல் வழக்கறிஞராக நந்தினி தேர்ச்சி பெற்றுள்ளதை எங்கள் சமுதாய மக்கள் கொண்டாடி வருகின்றனர். கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள பழங்குடியினத்தில் பெண்கள், தற்போது உயர் கல்வி படித்து, எங்கள் சமுதாயத்துக்கே முன் மாதிரியாக திகழ்கின்றனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago